கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த நூற்றாண்டை தேசிய, சர்வதேச ரீதியில் வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பெர்குஷன் உயர் கல்லூரியில் இன்று (27) நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் வரலாறும், வாழ்க்கை வரலாறும் அந்த நாட்டினதும் வாழ்க்கையினதும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு சாட்சியாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பணத்தின் அடிப்படையில் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் தற்போதைய சமூகத்தின் பரீட்சையைப் போன்றே வாழ்க்கையிலும் வெற்றிபெறவேண்டிய சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள பாடசாலை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைவதில் முன்னிலையில் இருந்தபோதிலும், அவர்களது ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி பிள்ளைகளின் ஒழுக்கம் தொடர்பில் வளர்ந்தோரும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நாட்டுக்கு சொல்லும் வகையில் அண்மையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
1 comment
பாடசாலை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைவதில் முன்னிலையில் இருந்தபோதிலும் , சிங்கள சிங்ககுட்டிகளின் ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக மைத்திரி மாமா புலம்பல், சபாஸ் , ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், — நற்பண்பு உடையவனை நல்ல குடியில் பிறந்தவன் என எண்ண வேண்டும், நற்பண்பில்லாதவன் கெட்டகுலத்தில் பிறந்தவனாக கருதப்படுகிறானாம் குறள் , கொலை கொள்ளை கற்பழிப்பு நடத்திய கொலைகாரர்களுக்கு தனடனை வழங்க மாட்டோம் அவர்களை காட்டி கொடுக்க மாட்டோம் என்று சிங்கள வெறியர்களே வீரவசனம் பேசும்போது எதிர்கால சிங்கள சிங்கக் குட்டிகள் ஒழுக்கமானவர்களகா வந்து விடுவார்களா அல்லது தாங்களும் தமிழ் மக்களை கொலை செய்து துட்டகெமுனு என்ற பெயர் எடுக்க விரும்புவார்களா, எது எப்படி இருப்பினும் தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மார்களின் கண்ணீர் சிங்கள தேசத்தை கருவறுத்தே தீரும். ராஜன்.