201
இலங்கை கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் திக்வெல்ல பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை பயிற்சியின் போது இடது கையில் ஏற்பட்டுள்ள உபாதையானது சிறிய உபாதை என்ற போதிலும் குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சில வேளைகளில் திக்வெல்ல எதிர்வரும் இருபதுக்கு 20 போட்டித் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love