தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தானவிதாரனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கபில ஹெந்தாவிதாரன தலைமையிலான குழுவொன்று கடந்த காலங்களில் கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்டதாக அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்கு மூலம் அளித்திருந்தார். இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஹெந்தாவிதாரனவிடம் நேற்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் காவல்துறை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த மேலும் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.