144
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புடன் இணைந்து கொள்ளும் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அரசாங்கம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட மைத்திரி தரப்பு முயற்சித்து வருவதாகவும், இரவு விழுந்த குழியில் பகல் விழத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீளவும் மைத்திரி தரப்புடன் இணைந்து கொள்வதற்கான எவ்வித சாத்தியங்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love