மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் களப்பயிற்சி ஒத்திகையை திடீரென ஆரம்பித்ததால் மக்கள் பதட்டமடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப்; பயிற்சி எதிர்வரும் 4ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கடற்கரையோர வீதியின் ஊடாக பருதித்துறை நகருக்குள் திடீரென இராணுவத்தின் தொடர் வாகன அணி பிரவேசித்தமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அடையாளம் பொறிக்கப்பட்ட 68 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரையோர வீதியின் ஊடாகச் சென்றதாகவும் மாலியில் ஐ.நா.வின் சண்டை வாகனத் தொடரணியில் இடம்பெறவுள்ள இராணுவத்தின் 15 அதிகாரிகள் மற்றும் 185 படையினர் இந்தப் ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.