ஆயோத்தி பிரச்சினைக்கு நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காண முடியாது என்று பாபர் மசூதி செயல் குழு தெரிவித்துள்ளது.
அயோத்தி பிரச்சினைக்கு நீதி மன்றத்துக்கு வெளியே பேசி தீர்வு காண முடியாது என்று பாபர் மசூதி செயல் குழு தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகின்ற நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே இப்பிரச்சினை தொடர்பாக சுமூகமாக பேசி தீர்வு காண முயற் சிக்கலாம் என இரு தரப்புக்கும் உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என பாபர் மசூதி செயல் குழு ஒருங்கிணைப் பாளர் ஜபர்யப் ஜிலானி தெரி வித்துள்ளார்.
இந்த விவ காரம் குறித்து பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காது எனவும் இருவருமே பாஜகவின் அடிப்படை உறுப்பினர்கள் என்பதுடன் ராமர் கோயில் எழுப்பும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே பல முறை நீதிமன்றத்துக்கு வெளியே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை களும் வீணாகவே முடிந்திருக் கின்றன எனவும் எனவே உச்ச நீதிமன்றம் வழியாக தான் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதபதியோ அல்லது பிற நீதிபதிகளில் யாரேனும் ஒருவரோ இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தால், அதற்கு முஸ்லிம்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்றும் பாபர் மசூதி செயல் குழு தெரிவித்துள்ளது.