தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருந்த 3 பேரையும் மீண்டும் தேடி ஒப்படைக்குமாறு குற்றப்பபுலனாய்வுப்பிரிவினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்ட அறுவரில் ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. ஏனைய மூவரும் குற்றமிழைக்கவில்லை எனத் தெரிவித்து நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருந்தது.
இந்தநிலையில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு செய்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே நீதிமன்றம் மேற்படி உத்தரவிட்டுள்ளது.
சசிகலா ரவிராஜின் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் குறித்த மூவரும் வழங்கிய முகவரிக்குரிய இடங்களில் இருந்து வெளியேறிவட்டதால் வழக்கு தொடர்பான அறிவிப்புக் கடிதத்தை அவர்களிடம் சேர்க்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கினை ஜுன் மாதம் 19ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.