எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டங்களுக்கான ஆசன பகிர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதால், இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்துவது, உள்ளுராட்சிமன்ற அமைச்சர் மற்றும் நாடாளுமன்றத்திடமே உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றயை தினம் நடைபெறவுள்ளது.