உண்ணாவிரதம் இருப்பதற்காக பிணை வழங்கினால் அது பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் பிணை கோரி உண்ணாவிரதம் இருப்பதும், அதற்காக பிணை வழங்குவதும் பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கையானது நீதிமன்றக் கட்டமைப்பையே பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் வரலாற்றுக் காலம் முதல் இரண்டு விதமாகவே அமுல்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். மாளிகையின் எஜமானுக்கான சட்டம் அந்த மாளிகையில் பணியாற்றும் தொழிலாளிக்கு பொருந்துவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஒரு திருடனை கைது செய்யும் போது அந்தத் திருடன் ஏன் ஏனைய திருடர்களை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்ப முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறு அனைவரும் உண்ணாவிரதம் இருந்தால் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.