இலங்கையில் சுமார் எட்டு லட்சம் பேர் மன அழுத்தம் காரணமாக உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கொதலாவல பாதுகாப்பு கல்லூரியின் உளவியல் நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவரும் விரிவுரையாளருமான நீல் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எவ்வித சிகிச்சைகளும் பெற்றுக்கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இது தற்கொலை, இருதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டளவில் இந்த நோய்கள் ஏற்படக்கூடிய பிரதான காரணிகளில் ஒன்றாக மன அழுத்தம் மாற்றமடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆபிரகாம் லிங்கன், எட்வின் ஒல்வரின், பீதோவன் மற்றும் இளவரசி டயானா போன்றவர்கள் தங்களுக்கு மன அழுத்தம் காணப்பட்டது என்பதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன அழுத்தம் தொடர்பில் உதாசீனமான போக்கைக் கடைப்பிடிக்காது சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.