இலங்கை

ஊடகவியலாளர்களை கொலை செய்த இராணுவப் படையினரை பாதுகாக்க முடியாது – ஜனாதிபதி


ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை படுகொலை செய்த இராணுவப் படையினரை தம்மால் பாதுகாக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் மற்றும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்கத் தயார் என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபடாத வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள், விளையாட்டுவீரர்கள் கொலையுடன் தொடர்புடைய படையினர் பாதுகாக்கத் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நாட்டுக்கு பாரியளவில் நன்மதிப்பு கிடைத்துள்ளதாகவும் உலக நாடுகள் இலங்கை மீது தற்போது நல்ல மரியாதை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி இதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை என சிலர் கேள்வி எழுப்பி வருவதாகவும், இந்த நன்மதிப்பினைப் பயன்படுத்தி யுத்த வீரர்களை அரசாங்கம் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட படையினர் சவால்களை எதிர்நோக்கினால் அவர்களுக்காக இந்த அரசாங்கம் எப்போதும் குரல் கொடுக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply