பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகம்மது இர்பான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓருவருட தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் போது இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இர்பானை கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து ஊழல் தடுப்பு நடத்தை விதியை மீறியதாக இர்பான் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பில் கிரிக்கெட் வாரியத்தின் விசாரணைக்குழு முன் முன்னிலையாகிய இர்பான் சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்டதனை ஒப்புக் கொண்டதனை அடுத்து ஒருவருடத் தடையும் 1 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.