156
ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்றையதினம் அதிக கார்கள் சோதனைக்காக காத்திருந்த வேளை தற்கொலைதாரி ஒருவர் செலுத்தவந்த லொறியை கார்கள் மீது மோதியதுடன் வெடிகுண்டுகளையும் வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகின்றது
Spread the love