162
தேர்தலை ஒத்தி வைக்கும் நடவடிக்கையானது சட்ட மீறலாகும் என பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்துவது உள்நாட்டு சட்டங்களை மட்டுமன்றி சர்வதேச பிரகடனங்களையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கம் துரித கதியில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கண்டியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love