1750 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோரி 23,000 புலம்பெயர் இலங்கையர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன தெரிவித்துள்ளார். எனினும், இந்த தடவை 1750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் திட்டத்தை மீள அறிமுகம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் தற்போது நாட்டில் யுத்தம் கிடையாது எனவும் புலம்பெயர் மக்கள் இலங்கை திரும்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.