சோழ மன்னர்கள் இலங்கையை ஆக்கிரமித்த காலகட்டத்தில் பௌத்த தர்மத்தை அழிக்க முனைந்தனர். அதைப்போலவே இன்று ஒரு விகாரையையோ, புத்தர் சிலையையோ அமைக்க முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காரணம் அதற்கு சீமெந்து எங்கிருந்து கிடைத்தது என விசாரிக்கும் ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ளனர். இவர்களும் தர்மத்திற்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்றும் மஹிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார்.
இப்போது ஒரு விகாரையை அமைத்தால், சீமெந்து எங்கிருந்து கிடைத்தது என ரகசிய பொலிஸார் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ள என்று தெரிவித்துள்ள அவர் அரசாங்கமே இதனை மேற்கொள்கின்றது என்றும் குற்றம் சுமத்தினார்.
சோழ மன்னர்கள் இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பௌத்த தர்மத்தை அழிக்க முனைந்தனர். ஆனால் எம்மவர்கள் தர்மத்தை பாதுகாத்துள்ளனர்.எமது பிள்ளைகள் நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கு எமது தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.