பிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரிந்து செல்வது தொடர்பில் கடந்த 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதும் 55 சதவீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு எதிராக வாக்களித்தமையியால் அது தோல்வியில் முடிவடைந்தது.
இந்தநிலையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தும் நோக்கில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட நிலையில் ஸ்கொட்லாந்து பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரித்தானிய பிரதமரிடம் கடிதம் முறையாக அனுமதி கோரியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், இஅதில் அதிருப்தியடைந்துள்ள ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.