இந்தியாவில் இருந்து சுமார் 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹொக்கையின் போதை பொருள் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பருத்தித்துறை கரையில் இருந்து சுமார் 20 கடல் மையில் தொலைவில் இந்திய தேசிய கொடி பொறிக்கப்பட்ட படகொன்று சந்தேகத்திற்கு இடமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுற்றி திரிந்துள்ளது.
அதனை அவதானித்த கடற்படையினர் குறித்த படகை தமது படகுகளில் சென்று சுற்றி வளைத்து படகினுள் தேடுதல் நடாத்திய வேளை படகினுள் இருந்த 20 லீற்றர் கொள்வனவு உடைய எண்ணெய் கொள்கலனில் மறைத்து வைக்கபட்டு இருந்த போதை பொருளினை கடற்படையினர் கைப்பற்றினர். அத்துடன் படகில் இருந்த ஆறு பேரையும் கைது செய்தனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதை பொருள் 13.5 கிலோ கிராம் நிறையுடையது எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 162 மில்லியன் ரூபாய் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.
13.5 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளுடன் இந்தியர்கள் கைது
Apr 2, 2017 @ 03:17
13.5 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளுடன் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் இவ்வாறு ஆறு இந்தியர்கள் வடக்கு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.