203
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையானது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சல்லி செட்டி தெரிவித்துள்ளார்.
இன்று 03-02-2017 இரவு ஏழு மணியளவில் கிளிநொச்சியில் 43 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து உரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையே தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலிகளை நாங்கள் உணர்கின்றோம் அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியாக இருக்கிறது எனத் தொிவித்தாா்.
சர்வதேச சமூகமும், ஜநாவும் தங்களை ஏமாற்றிவிட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருதுகிறர்கள் என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டமைக்கு பதிலளித்த அவர் நாமும் அவர்களிடம் அந்த உணர்வை பார்க்கின்றோம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏன் அவ்வாறு நம்புகின்றார்கள் என்றால் இதற்கு தீர்வு காண்பதற்கு நீண்ட காலம் எடுத்தமையே எனவும் தொிவித்தாா்.
மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை எழுபதற்கு மேற்பட்ட நாடுகளை பிரதிபலிக்கிறது எனவும் நாங்கள் சர்வதேச ரீதியில் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம் எனவும் அத்தோடு அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் என்பது அரசை சுந்திரமாக விட்டுள்ளது என்று அர்த்தமல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவா் இந்த காலப்பகுதியில் அரசு சர்வதேச சமூகத்திற்கு தான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் தொிவித்தாா். அதற்காகவும் நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சல்லி செட்டி தெரிவித்துள்ளார்.
இன்றைய இவர்களின் பயணத்தின் போது சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கைக்கான விசேட நிபுணர் யோலண்டா போஸ்டர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
Spread the love