துருக்கியின் ஜனாதிபதி ரையிப் எடோர்ஜன் ( Tayyip Erdogan ) ஐரோப்பிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். துருக்கியின் அரசியல்வாதிகள் ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் ஐரோப்பாவின் சில நாடுகள் பாசிசவாதத்தை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கு அஞ்சப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
துருக்கியின் பெருமையையும் கௌவரத்தையும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் சிதைப்பதற்கு இடமளிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் துருக்கி மீது ஐரோப்பிய நாடுகள் பிரயோகித்து வரும் அழுத்தங்களுக்கு அந்த நாடுகளில் வாழ்ந்து வரும் துருக்கிப் பிரஜைகள் தேர்தலில் உரிய பதிலளிக்க வேண்டுமென கோரியுள்ளார்.