மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டை புதிய திசையில் கொண்டு செல்ல ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனநாயக நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலும் ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் பாராட்டுக்களை தெரிவித்தாகவும் அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சிகளுக்கு ஜேர்மானிய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார் எனவும் ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜேர்மானிய தூதுவர் John Rhode அவர்களும் சந்திப்பில் கலந்து கொண்டார்.