146
சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையில், மூன்றாம் எதிரிக்கு யாழ்.மேல் நீதிமன்றம் பிணை வழக்கி உள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிரிகள் எதிரி கூண்டில் நின்று சாட்சியம் அளித்து இருந்தனர். அதில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் நபரை தனக்கு தெரியாது எனவும் தான் அவரை கண்டதே இல்லை எனவும் மூன்றாம் எதிரியான தேவதயாளன் வாக்கு மூலம் அளித்து இருந்தார்.
அந்நிலையில் குறித்த நபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரியதை அடுத்து குறித்த சந்தேக நபரை 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.
Spread the love