நிலக்கண்ணி வெடிகளை இல்லாததொழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு வரையான இந்த வேலைத்திட்டத்துக்கு 1.2 பில்லியன் ரூபாய்களை பிரித்தானியா செலவிட உள்ளது. வடக்கில் அதிக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறந்த உற்பத்தி வளங்களைக் கொண்ட வாழ்வாதார பூமியாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அங்கு நிலக்கண்ணி வெடிகளை அகற்றி, மக்களின் இயல்பு வாழ்வை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.