175
மீன்பிடித்துறை அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்படக் கூடாது என வடக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது மீன்பிடித்துறை அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள வடக்கு மீனவர்கள் வடக்கு மீனவர்களுக்கு பல்வேறு வழிகளில் மீன்பிடித்துறை அமைச்சர் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தெரிவித்துள்ள வடக்கு மீனவப் பிரதிநிதிகள் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் பதிவாகியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love