174
பயண எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு இலங்கையில் பாதிப்பு கிடையாது என கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி லியனகே தெரிவித்துள்ளார். இன்புளுவென்சா நோய்த் தாக்கமானது பயண எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு பாதிப்பானதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் மட்டுமே இந்த நோய்த் தாக்கம் காணப்படுவதாகவும் கண்டி மாவட்டத்தில் அதிகளவு இன்புளுன்சா நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், அது பயண எச்சரிக்கை விடுக்கக்கூடிய அளவிற்கு ஆபத்தானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love