கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார விழா 2016 நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை வருடந்தோறும் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுப்படுகின்றவர்களை கௌரவிக்கும் வகையில் கரை எழில் விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அந்த வகையில் கூட்டுறவு, சமூகப் பணிக்கான விருது கார்த்திகேசு நாகலிங்கத்திற்கும், வேளாண்மைக்கான விருது கார்த்திகேசு பசுபதிபிள்ளைக்கும், சமூகப்பணிக்கான விருது நாகலிங்கம் சோதிநாதன் மற்றும் பொன்னம்பலம் நித்தியானந்தன் ஆகியோருக்கும், நாடகத்திற்கான விருது கதிரன் செல்லையா மற்றும் வேதநாயகம் மேரியோசப் ஆகியோருக்கும், அரங்க ஒப்பனை மற்றும் வில்லிசைக்கான விருது முருகேசு குலசிங்கத்திற்கும், பலதுறைக்கான விருது கனகையா மகேந்திரனுக்கும், வழங்கப்படவுள்ளன.
அத்தோடு கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்ட நான்கு வகையான முப்பத்தியாறு படங்கள் மூன்று ஒலிநாடாக்கள் ஏழு புகைப்பட அல்பங்கள் ஒரு ஆய்வு நூல் இத்தனையும் ஒரு பிரமாண்ட மேடையில் ஒன்றாக கிளிநொச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது