விளையாட்டு

மிஸ்பா உல் ஹக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் தனது ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 10ஆம் திகதி முடிவடையவுள்ளது. 42 வயதான மிஸ்பா உல் ஹக் இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்காயிரத்து 951 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 53 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply