167
கடந்த 2017.04.02 அன்று சமுர்த்தி வங்கிகளுக்கு புகழாரம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி வங்கிகளுக்கான தரப்படுத்தல் நிகழ்வில் இலங்கையில் உள்ள ஆயிரத்துஎழுபத்திநான்கு சமுர்த்தி வங்கிகளில் முப்பத்தி நான்கு வங்கிகள் ‘ஏ’ தர வங்கிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது
இவற்றில் வடக்குக் கிழக்கில் ஆறு வங்கிகள் ‘ஏ ‘தர வங்கிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் ஐந்து வங்கிகள் யாழ்மாவட்டத்திலும் ஒன்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிளிநகர வங்கியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது
நாடு பூராகவும் சமுர்த்தி திட்டம் கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக அமுல்ப் படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று வருடமாகவே சமுர்த்தி திட்டம் அமுல்ப் படுத்தப்பட்டு செயற்ப்பாட்டில் உள்ளது
மூன்று வருடத்திற்குள் பதினெட்டு வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகின்ற வங்கிகளுடன் போட்டியிட்டு ஏ தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை கிளிநொச்சி நகர சமுர்த்தி வங்கி முகாமையாளர் மற்றும் பணியாளர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு என கருதப்படுகின்றது
Spread the love