பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் உத்தியோக பயண மாக நேற்றையதினம் இந்தியா வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்தநிலையில் ஹசீனா, பிரதமர் மோடியுடன் இன்று பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பங்களாதேசும் இந்தியாவும் இணைந்து செயல்படுவது குறித்தும் பங்களாதேசில் இந்தியா அணு உலைகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் 25 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.