பிலிப்பைன்சின் லுசான் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லுசான் தீவானது பிலிப்பைன்சின் அதிகளாவான மக்கள்தொகையைக் கொண்ட மிகப்பெரிய தீவாகும்.
இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவுல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்றிரவும் இதே பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுமார் நாற்பது முறை அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.