Home இந்தியாஒரிஸா மாநிலத்தில் மதக்கலவரம் – ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஒரிஸா மாநிலத்தில் மதக்கலவரம் – ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

by admin


இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தின் பத்கர் நகரில் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ராமர் – சீதை குறித்து சமூக வலைத்தளத்தில் தவறான  கருத்து வெளியானதை தொடந்து அது அங்கு  மதக்கலவரமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அங்கு பாடசாலைகள்  கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கலவரத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படாத போதும்  பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாகவும் பல வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என ஒரிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More