176
மலையத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோட்சவத்தை முன்னிட்டு இன்று (09) ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில் முத்தேர் பவனி இடம் பெற்று வருகின்றது.
காலை ஆரம்பமான விஷேட பூஜைகளுடன் விநாயகர் வழிபாடு. பட்டு எடுத்தல்¸ வசந்த மண்டப பூஜை¸ திருவூஜ்சல் ஆகியன நடைபெற்று மும்முர்திகள் ரதபவணி ஆரம்பமானது. தற்போது தேர்பவனி புஸ்ஸலஸலாவ நகர் வழியாக வலம் வந்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனா் என தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love