மீனவர்கள் கடல் எல்லையை மீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்காக பாக்கு நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற இந்திய – இலங்கை மீனவ பிரச்சினை தொடர்பான உயர்மட்ட குழுக்கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் இரு நாட்டு அமைச்சர்களும், கடற்றொழில் அதிகாரிகளும், மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும் இதன்போது இந்திய மீனவர்களின் இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கை படிப்படியாக குறைக்கப்படுமென இந்திய தரப்பினர் உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுவதுடன் இந்திய மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்கு ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.