155
சென்னை அண்ணாசாலையில் இன்று காலை மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்ற மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் வீதியில் ஏற்பட்ட விரிசலை வேடிக்கை பார்க்கும்விதமாக பொதுமக்கள் யாரும் கூடவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலையில் உள்ள சர்ச்பார்க் பள்ளியின் அருகே 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இந்தப் பள்ளத்தில் மாநகரப் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் சிக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love