Home இலங்கைவடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்

வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்

by admin


வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு மக்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பிரதிநிதிகள் அண்மையில் திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு  சென்று  மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும்  நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்கச் செய்யும் மிகப் பிரமாண்டமான கூட்டமாக இந்தக் கூட்டம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் மேனக் குழு இன்றைய தினம் அதன் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமையில் கூடி, பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More