146
ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் நடத்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு நாமல் பெரேரா மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. மிகவும் சன நெரிசல் மிக்கதும் பாதுகாப்பு படையினரின் பிரசன்னத்துடன் கூடிய பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நாமல் பெரேராவை கடத்த முயற்சித்த போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது நண்பர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
Spread the love