சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பில் மத போதகர் ஜாகீர் நாயக்குக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பங்களாதேசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட் தீவரவாதி ஒருவர் மத போதகர் ஜாகீர் நாயக்கின் மத பிரசாரங்களால், தான் ஊக்குவிக்கப்பட்டதாக தெரிவித்ததனையடுத்து ஜாகீர் நாயக்கின் பின்னணி பற்றி இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.
அதில், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஜாகீர் நாயக் மீது அமுலாக்கப்பிரிவு, சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போதும் ஜாகீர் நாயக் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது