மதுப்பழக்கம் மற்றும் தற்கொலைகளிலிருந்து இளைஞர்களை மீட்க போதிய மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி யுள்ளார். தற்கொலை தடுப்புக்கென உருவாக்கப்பட்ட சிநேகா அமைப் பின் 31-வது ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்றோர் தண்டிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என மாநிலங்களவையில் முதல் முறையாக தான்தான் குரல் கொடுத்தமையால்தான் இன்று அதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேலையின்மை, தேர்வில் தோல்வி, வரதட்சணை கொடுமை, குடும்ப பிரச்சினை போன்றவை காரணமாக இளம் தலைமுறையினர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் இவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க போதிய பயிற்சியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பாக மதுப்பழக்கத்திலிருந்து இளைஞர் களை மீட்க போதுமான மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.