148
கிளிநொச்சி பூனகரி 10- கட்டடை, பூநகரி முட்கொம்பன் சந்தியில் இடம் பெற்ற வீதிவிபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையிலும் மற்றயவர் யாழ்ப்பாண வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இன்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக தனது சொந்த வாகனத்தில் பயணித்த யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியின் வாகனம் பூநகரி பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது பின்னால் சென்ற உந்துருளி வாகனத்துடன் மோதுண்ட போதே ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பூநகரி பொலீஸார் கருத்து தெரிவிக்கும் போது ஒரு உந்துருளியில் மூவர் பயணித்ததாகவும் அதில் இருவருக்கு தலைக் கவசம் இல்லை எனவும் அத்தோடு பிரதான பாதையிலிருந்து முட்கொம்பன் திரும்புவதற்காக வாகனத்தை முந்திச் செல்ல உந்துருளி முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலதி விசாரணைகளை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love