126
மீதொட்டுமுல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர், இவ்வாறான அனர்த்தங்கள் மீளவும் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்திய இரா சம்பந்தன், இந்த மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
1 comment
மீதொட்டுமுல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும், எதிர்க் கட்சித் தலைவருக்கேயுரிய மிகுந்த பொறுப்புணர்வுடன் கோரிக்கைகளை முன்வைத்தமையானது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. எனினும் இதே பொறுப்புணர்வுடன், வடக்கு- கிழக்கு வாழ் மக்களின் பலதரப்பட்ட போராட்டங்கள் குறித்துக் கரிசனையற்றிருப்பது கண்டனத்துக்குரியது.
இதே வேளை, ‘தமிழ் மக்கள் விரும்பினால் நான் பதவி துறக்கத் தயார்’, எனத் திரு. சம்பந்தன் கூறியதானதொரு செய்தியை இன்றைய செய்தியூடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இச் செய்தி உண்மையாக இருந்தால், அது அவரின் கபடத்தனத்தையே காட்டுகின்றது.
தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதுபோன தனது இயலாமையை மறைக்க, மக்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயலுகின்றாரா? இவர் மீதும். இவரது தேர்தல் வாக்குறுதிகள் மீதும் பூரண நம்பிக்கை வைத்துப் பாராளுமன்ற அங்கத்தவராகவே மக்கள் இவரைத் தெரிவு செய்தார்கள். அதிர்ஷ்டவசமாக, இவருக்கு யானை பலமுள்ள எதிர்க்க கட்சித் தலைவர் பதவியே கிடைத்திருக்கின்றது! இப் பதவியை வைத்து எவ்வளவையோ செய்திருக்கலாம்? அதன் அர்த்தம், இராணுவத்தை அப்புறப்படுத்துவது, அவர்கள் கையகப்படுத்திய காணிகளையும், அரசியல் கைதிகளையும் விடுவிப்பது என்பதல்ல! மாறாக, ஆளும் அரசின் இது போன்ற இனவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில், தமிழரின் நியாயப்பாட்டை ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கலாம்?
ஜனாதிபதி தனது இயலாமையைக் கூறிக் கைவிரித்துவிட்டதொரு நிலையில், தனது இயலாமையை மறைத்துப் பதவி துறக்க மக்களைக் காரணமாக்குவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல! இன்னமும் காலம் கடந்துவிடவில்லையென்றே நம்புகின்றோம்! சிந்திப்பாரா?