தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை ( Park Geun-hye ) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச இரகசியங்களை கசியவிடல், லஞ்சம் பெற்றுக் கொள்ளல், அதிகார துஸ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்னாள் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல் நலன்களை வழங்கி சில நிறுவனங்களிடம் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பி சோய் சூன் சில் ( Choi Soon-sil ) கப்பம் பெபற்றுக்கொள்ள வழியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியும் அவரது நண்பியும் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிக்கின்றனர்.