மீதொட்டுமுல்லவில் நோய்கள் பரவுவதனை தடுக்க அரசாங்கம் நடடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவை அடுத்து, அந்த பகுதியில் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் நோய்பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ள போதும் இதனை தடுக்கும் வழிமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நுளம்பு உள்ளிட்ட நோய் காவிகளின் ஊடாக ஏற்படுகின்ற நோய்ப்பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கு நோயெதிர்ப்பு மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.