Home இலங்கைமீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நட்டஈடு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

மீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நட்டஈடு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

by admin


மீதொட்டுமுல்ல அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு தொகை நட்டஈடு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

சொத்துகளுக்காக 2.5 மில்லியன் ரூபாவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் மரண செலவுகளையும் பொறுப்பேற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More