இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். துமிழகம் சென்றுள்ள அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான வளம் இலங்கையின் நீதித்துறையில் உள்ளதென குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதியும்; பிரதமரும் நாட்டின் மறுசீரமைப்பு விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை ஐயாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.