201
பிரபல டென்னிஸ் வீரர் அண்டி மரே, மொன்ரே கார்லோ மாஸ்ரேர்ஸ் ( Monte Carlo Masters ) போட்டித் தொடரில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளார். பிரித்தானிய நட்சத்திர வீரர் மரே, ஸ்பெய்னின் ராமோஸ் வினோலாஸ் (Ramos-Vinolas ) ) இடம் தோல்வியைத் தழுவியுள்ளார். 2-6 6-2 7-5 என்ற செற் கணக்கில் மரே தோல்வியைத் தழுவியுள்ளார்.
அண்டி மரே இதுவரையில் மொன்ரே கார்லோ போட்டித் தொடர் ஒன்றிலும் வெற்றியீட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழங் கை உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்த மரே, இந்தப் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றில் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love