கேரளாவில் ஒரேநாளில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 745 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகின்றதனால் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவும் நிலையில் கேரளாவை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளுத.
இந்த நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானவர்கள் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரேநாளில் மட்டும் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 745 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கு எடுக்கும் பணியினை மாநில சுகாதாரத்துறை ஆரம்பித்துள்ளது