Home இலங்கைமுப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை.

முப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை.

by admin

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30 ஆயிரம் கிலோ வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

பனை வெல்லங்களை மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்து வருவதாகவும் கடந்த வருடம் அதிகூடிய வெல்லங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் மத்தியில்  அதிகளவில் காணப்படுகின்ற நீரிழிவு; நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக பனை வெல்லங்களை மக்கள் அதிகப்படியாக கொள்வனவு செய்வதாகவும், உள்ளுர் மக்கள் மட்டும் அல்ல வெளிநாடுகளில் வாழும் மக்களும் வெல்லங்களை கொள்வனவு செய்வதாகவும், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ் துரைசிங்கம் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More