அரசாங்கத்தின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தமது மருத்துவ கல்லூரி கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ள அவர் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி சிறந்த மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது கல்லூரியில் மருத்துவம் பயின்றவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி, தேவையான அவசர சந்தர்ப்பங்களில் எந்தவொரு கடைநிலை பணியையும் மேற்கொள்ள தயங்கப் போவதில்லை எனவும் சில அரசாங்க மருத்துவர்கள் முதலாளிமாரைப் போன்று செயற்பட்டு வருவது வருத்தமளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.