தமிழகத்தில் வெப்ப அலை தாக்க முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன் போது தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஏற்கனவே 21ம்திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் மேற்படி சுட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் உயர் கல்வி நிறுவனங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் வெப்ப அலையினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் மேற்கொள்ள ஆவண செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறே மருத்துவத் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது குறித்தும், வெப்ப அலையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.