லெபானனில் ஐ.எஸ் தீவிரவாதத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உள்ளுர் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக லெபானன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லெபனானின், மலைப் பாங்கான எல்லைப் பகுதியில் அடிக்கடி தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கடத்தல்களுடன் தொடர்புபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தீவிரவாதத் தலைவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். எனினும், இந்த தீவிரவாத இயக்கத் தலைவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவம் வெளியிடப்படவில்லை. இதேவேளை, சிரியாவிலிருந்து லெபனானின் வடக்கு எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்த பத்து ஐ.எஸ் தீவிரவாதிகளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.